தமிழ்த்துறையின் மரபுச்சாரல்2025: பாரம்பரிய கலைகளுடன் பொங்கல் கொண்டாட்டம்!

நம் பள்ளியில்
10.1. 2025 அன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் அனைத்து துறை ஆசிரியர்களும், பெற்றோர்களும் பங்கு பெற்று, பொங்கலிட்டு மகிழ்ந்தனர். நம்முடைய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் மீட்டெடுக்கும் வகையில் பல்வேறு விளையாட்டுகள் உறி அடித்தல், கயிறு இழுத்தல், கோலப்போட்டி, என்று பல்வேறு விதமான விளையாட்டுகளும் நடைபெற்றது. நம்முடைய பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் கரகாட்டம்,மயிலாட்டம் ஒயிலாட்டம், காவடியாட்டம், பறையாட்டம், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்ற நிகழ் கலைகள் எல்லாம் நிகழ்த்தப்பட்டது. பெற்றோர்கள் பலரும் கிராமிய நடன நிகழ்வில் பங்கேற்று, விழாவிற்கு மேலும் மெருகூட்டினர். தமிழ்த்துறையின்
' மரபுச்சாரல்2025' சிறப்பாக நிறைவுற்றது. நம்முடைய பாரம்பரிய கலைகளையும் நம் வாழ்வியல் நூலான வள்ளுவத்தையும் அடுத்த தலைமுறைக்கு கடத்திச் செல்லும் பணியில் இந்த ஆண்டு தமிழ்த்துறை இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.